புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற  சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும். நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவது இன்றியமையாத ஒரு விடையம் என தொடர்ச்சியாக கூறிவரும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
முல்லைத்தீவு நகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கரையோரக் கிராமமான நாயாற்றிலுள்ள நீராவியடி ஏற்றம் என்றழைக்கப்படும் பகுதியிலேயே மாயாபுர சிங்கள குடியேற்றத்தை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
முகத்துவார பிரதேசமான இந்த இடத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதியை மையப்படுத்தியே இந்த சிங்கள குடியேற்றம் அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இந்த சுற்றுலா விடுதி மற்றும் சிங்கள குடியேற்றத்தை அமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள காணி, முந்திரிகை செய்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்ததாகும்.
 
இறுதிக்கட்ட போரின் போது இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், வனவளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை மக்களின் பாவனைக்கு இதுவரை வழங்கவில்லை.
 
இந்த நிலையிலேயே மகாவலி அதிகார சபை சுற்றுலா விடுதியையும், அதனை மையப்படுத்தி சிங்கள குடியேற்றத்தையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ad

ad