புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

சம்பந்தன் உறுதிமொழி :உண்ணாவிரதத்தை கைவிட்ட கேப்பாபுலவு மக்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிடப்பட்டுள்ளது.
 
கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மார்ச் மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதேவேளை மூன்று மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடமாகாண முதலமைச்சர் உறுதி வழங்கியதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
 
இந்தநிலையில் மூன்று மாதங்கள் கடந்துள்ளபோதிலும் தமக்கு எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தெரிவித்து, மக்கள் மீண்டும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் தொலைபேசி மூலம் மக்களுடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டாம் எனவும், ஒரு மாத காலத்தில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்ததாகவும் இதனால் போராட்டத்தை மேற்கொள்ளும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்.

சூரியபுரம், கேப்பாபிலவு, பிலவுகுடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களிலுமுள்ள 520 ஏக்கர் காணி, இராணுவத்தினரின் கைவசம் உள்ள நிலையில், இக்கிராமங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதிரிக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ad

ad