புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு!

சுவாதி கொலை வழக்கில் கைதான கொலையாளி ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
. இதையடுத்து நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந்தேதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி ஒரு வாரத்திற்கு பின் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராம்குமார் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சுவாதியின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. சுவாதியை கொலை செய்த உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், கிராமப்புறத்தை சேர்ந்த ஏழையான என்னை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் கைது செய்யும் போது, என் கழுத்தை நானே அறுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், நான் அறுக்கவில்லை. பொலிசாருடன் வந்தவர்கள் தான் என் கழுத்தை பிளேடால் அறுத்தனர்.
எனவே, எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகர அரசு வக்கீல் ஆஜராகி, ‘இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராம்குமார் ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெறும்போது, அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து யாரும் அணுகவில்லை.
இந்த மனுவை தாக்கல் செய்ய ராம்குமாரிடம் வக்காலத்து மனு வாங்கவில்லை. அவரது உறவினர்களிடம் கூட அனுமதியை பெறாமல், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே மனுவை முதலில் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்றார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ‘இந்த ஜாமீன் மனுவை ராம்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை வக்கீல் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் வாதம் செய்ய நான் ஆஜராகியுள்ளேன்.
குற்றவியல் விசாரணை முறைசட்டத்தின்படி, குற்றவாளியிடம் வக்காலத்து பெற்று ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை’ என்று வாதிட்டார்.
வக்கீல் ஜார்ஜ் வில்லியம் என்பவர் ஆஜராகி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆஜராகுவதாகவும், ராம்குமாருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
இதுபோல, மேலும் பல பெண் வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராகி, ராம்குமார் கொடூரமாக இளம்பெண் ஒருவரை கொலை செய்துள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி ஜெயசந்திரன், இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் பொலிஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டா

ad

ad