புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2016

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த
ராஜ­பக் ஷ தலை­மையில் ஒன்­றி­ணைந்து புது யுகத்­திற்­கான சரித்­திரம் படைப்­பார்கள் என கூட்டு எதிர்க் கட்சி தெரி­வித்­துள்­ளது.
நாட்டை நேசிக்கும் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­களும் எதிர்ப்புப் பேர­ணியில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்­பாக அர­சாங்­கத்­திற்குள் இருந்துகொண்டு செய்­வ­த­றி­யா­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உண்­மை­யான பக்­தர்கள் வெளியில் வர வேண்டும்.
அப்­போது தான் மக்கள் வழங்­கிய ஆணைக்கு கௌரவம் கிடைக்கும். எவ்­வா­றா­யினும் அனைத்து அச்­சு­றுத்­தல்கள் மற்றும் சவால்­களை தாண்டி கூட்டு எதிர்க் கட்சி மிக விரைவில் வெற்­றி­யி­லக்கை அடையும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.
கண்­டியில் இருந்து கொழும்பை நோக்­கிய எதி­ர்ப்புப் பேரணி குறித்து ஏற்­பாட்டுக் குழு உறுப்­பினரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தொடர்ந்தும் கூறு­கையில்,
எதிர்­வரும் 27 ஆம் திகதி புதன்­கி­ழமை கண்டி தலதா மாளி­கையில் விஷேட வழி­பா­டுகள் ஒழுங்குசெய்­யப்­பட்­டுள்­ளன. இதில் மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க் கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்கள் மற்றும் கட்சித் தலை­வர்கள் கலந்துகொள்­ள­வுள்­ளனர். அன்­றைய தினம் மல்­வத்து பீடத் தின் மகாநா­யக்­கரை சந்­தித்து ஆசீர்­வாதம் பெற்றுக் கொண்­டதன் பின்னர் சர்­வ­மதத் தலை­வர்­க­ளையும் சந்­திக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.
மறுநாள் வியா­ழக்­கி­ழமை காலை 9 மணிக்கு கண்டி தலதா மாளி­கைக்கு முன்­ பாக கொழும்பை நோக்­கிய பேரணி ஆரம்­பிக்­கப்­படும். முதல் நாள் மாவனெல்லை வரை பேரணி செல்லும். 29 ஆம் திகதி வெள்­ ளிக்­கி­ழமை மாவ­னெல்­லையில் இருந்து நெலுந்­தெ­னி­யவை நோக்கி செல்லும். 30 ஆம் திகதி நெலுந்­தெ­னி­யவில் இருந்து நிட்­டம்­புவ வரையில் பேரணி செல்லும். 31 ஆம் திகதி நிட்­டம்­பு­வவில் இருந்து கிரி­பத்­கொடை வரையில் செல்­வ­துடன் முதலாம் ஆம் திகதி கிரி­பத்­கொ­டையில் இருந்து கொழும்பை நோக்கி கூட்டு எதிர்க் கட்­சியின் பேரணி செல்லும். அன்­றைய தினம் கொழும்பில் கூட்டம் ஒன்றை நடத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
6 விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே இந்த எதிர்ப்புப் பேரணி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் நாட்­டுக்கு எதி­ரான சதி, தேர்தல் ஒத்­தி­வைப்பு, வரி அதி­க­ரிப்பு, இந்­தி­யா­வு­ட­னான ‘எட்கா’ ஒப்­பந்தம், விவ­சா­யி­க­ளுக்­கான மானிய ரத்து மற்றும் அர­சியல் பழி­வாங்­கல்கள் ஆகி­ய­வற்­றுக்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்புப் பேரணியை நடத்துகின்றது.
பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், அரசாங்கத் திற்கு எதிரான இந்தப் பேரணியானது வர லாறு படைக்கும் என்றார்.

ad

ad