திங்கள், ஜூலை 04, 2016

கல்லூரி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி மரணம்


சேலம் மாவட்டம் கீரிப்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது-22) என்ற பெண் சேலம் AVS கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்.

இன்று காலை கல்லூரி பேருந்தில் ஈஸ்வரமூர்த்தி பாளையம் அருகே வரும் போது கல்லூரி பேருந்து வேகமாக பிரேக் போட்டதின் விளைவாக பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரியதர்ஷினி தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் பக்க கதவு திறந்து கீழே விழுந்து விடுகிறார்.

தலையில் பலமான அடிபட்ட மாணவி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

காதல் தோல்வியில் மாணவி கீழே விழுந்து தற்கொலை என மங்களபுரம் போலீசார் பொய்யாக வழக்கை மாற்றி எழுதுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது