புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். எனினும், அவருக்கு தொடர் சிகிச்சை அவசியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் யாழிலிருந்து கொழும்பு வந்திருந்த வடக்கு முதல்வர், வடக்கின் பொருளாதார மையம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad