புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

ராம்குமார் நாளை கோர்ட்டில் ஆஜர்கழுத்தில் தையல் பிரிக்கப்பட்டு குணம் அடைந்தார்

சுவாதி கொலை வழக்கில் இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ராம்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளதுராம்குமார் 

 சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் போலீசில் பிடிபட்ட போது தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாக தகவல். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராம்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தையல் பிரிக்கப்படாமல் இருந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை சிறை டாக்டர்கள் பரிசோதித்தனர். கழுத்தில் ஏற்பட்ட காயம் குணம் அடைந்தது.

இதையடுத்து கழுத்தில் போடப்பட்ட தையல் பிரிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்ததாக பரிசோதனை செய்த சிறை டாக்டர்கள் சான்றிதழ் அளித்தனர்.

ad

ad