புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2016

மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரம் -வலியுறுத்தும் கிழக்கு முதல்வர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நசீர் அகமட் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமத், “1987ஆம் ஆண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன.

மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்குமாறு,இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணசபை, ஏனைய மாகாணசபைகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்திட்டம் முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad