புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

டாப்-10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடம்

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

 உலகின் பணக்கார நாடுகள் குறித்து ‘நியூ வேல்டு வெல்த்’ என்ற அமைப்பு கணக்கெடுப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 48,900 பில்லியன் டாலராக உள்ளது. பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும், முறையே 17,400 பில்லியன் டாலர், 15,100 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளன.
4-வது இடத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது. இதன் மதிப்பு 9,200 பில்லியன் டாலர் ஆகும். இதைத்தொடர்ந்து 5-வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. பிரான்சு 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் கனடா 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா, இத்தாலி முறையே 9-வது மற்றும் 10-வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாக கூறப்படுகிறது. டாலர் சொத்து வளர்ச்சி அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad