புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

ரூ.100 கோடியில் ’500 அம்மா பூங்காக்கள்’ ;ரூ. 50 கோடியில் ‘500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-


ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் உட்கட் டமைப்பு வசதிகள் ஏற்படுத்த பல்வேறு முன்னோடி திட் டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1.2015--16 ஆம் ஆண்டில், முதன் முறையாக, “தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம் பாட்டுத் திட்டம்“” என்ற புதிய திட்டம், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது. 
கிராம ஊராட்சிகளில்  மண் சாலைகளை தார்ச் சாலைகளாக மேம்படுத்த வும், சேதமடைந்த தார்ச் சாலைகளை வலுப் படுத்தவும் மற்றும் சிறு பழுதடைந்த தார்ச் சாலைகளை புதுப்பித்து பராமரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இந்த ஆண்டில், 900 கிலோ மீட்டர் நீளமுள்ள மண் சாலைகள் தார்ச் சாலைகளாக மேம்படுத்தப் படும்.  அதிக அளவில் சேத மடைந்த 1,400 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைகள் சீரமைக்கப்படும்;  1,200 கிலோ மீட்டர் நீளமுள்ள சிறு பழுதடைந்த தார்ச்சாலைகள் புதுப்பிக்கப்படும். 
இவை அனைத்தும் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம்,  விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது விளைபொருட்களை எளி தில் சந்தைப்படுத்தவும்,  கிராமப்புற பொருளாதாரம்   மேம்பாடு அடையவும்   வழிவகுக்கும். 

2.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  கடந்த 5 ஆண்டுகளில் 78 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 148 கோடியே 25 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ளன. 
இந்த ஆண்டு, 10 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

3.நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள  இடங்களில், தனிநபர் விவசாய நிலங் களில் நீர்ப்பாசன வசதி களைப் பெருக்கி, விவசாய விளைநிலங்களின் பரப் பினை அதிகரிக்க,  தனிநபர் கிணறுகள் மற்றும்  குழு கிணறுகள் அமைக்கப்படும்.  
இந்த ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களில், ஒரு கிணறு 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 250 தனிநபர் கிணறுகள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 

மேலும், போதிய இடம் இல்லாத நிலையில்  குறைந்த பட்சம் 3 விவசாயிகளைக் கொண்ட குழுக்களுக்கு, அரசு இடங்களில், ஒரு குழு கிணறு  தலா 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 250 குழு கிணறுகள்  30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.   மொத்தத்தில் 500 கிணறுகள் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.  
இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் நீர்ப்பாசன வசதியற்ற விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்து ஊரக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ் வாதாரம் மேம்படும். 

4. ஊரகப் பகுதிகளில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் அறிவுசார் வளர்ச்சியைப் பெற்று வளர்வதற்கான உகந்த சுற்றுச்சூழலை உரு வாக்கிட அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  இந்த மையங்கள் வளர்இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, உடல் நலப் பரிசோதனை செய்வதுடன் நோய் எதிர்ப்பு மற்றும் சுகாதாரக் கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.  

இந்த ஆண்டில்  ஊரகப் பகுதிகளில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.  இதன் மூலம், இம்மையங்களில் பயிலும் குழந்தைகள், காற்றோட்டமான, அதிக வசதிகளுடன் கூடிய பாது காப்பான இடங்களில் பயின் றிட வழி வகை ஏற்படும்.5.  ஊரகப் பகுதிகளை பசுமை மயமாக்க ஊரகச் சாலைகளின் இரு மருங்கிலும் பழ மரங்கள், கால்நடைத் தீவன மரங்கள் மற்றும் வருவாய் அளிக்கும் மரங்கள் நடப்படும்.  இம்மரங்கள், சாலைகளில் மண் அரிப்பைத் தடுப்பதுடன், ஊராட்சிகளுக்கு கூடுதலாக தொடர் வருவாய் கிடைக்கச் செய்திடும். இந்த ஆண்டில் கிராம ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் பிரதம மந்திரி கிராம திட்ட சாலைகளின் 
இரு மருங்கிலும் 10,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.  

6. சுற்றுச்சூழல் சம நிலையைப் பாதுகாத்திடவும், ஊரகப் பகுதிகளை பசுமை மயமாக்கவும், வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து  68 லட்சம் பழமரக் கன்றுகள் மற்றும் கட்டடப் பணிகளுக்கு,  பயன்படும்  மரக்கன்றுகள், தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பொருத்தமான இடங்களில் 555 கோடி ரூபாய் மதிப் பீட்டில் இந்த ஆண்டு நடப்பட்டு பராமரிக்கப்படும். 

7.    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சார்ந்த பல்வேறு சங்கங்கள் கிராம ஊராட்சி செயலர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும். 
சிறப்பு மாத ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.  அவர்களின் கோரிக்கையை ஏற்று, கிராம ஊராட்சி செயலர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஒட்டு மொத்தத் தொகையை 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாகவும், சிறப்பு மாத ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும். 

8. கிராம ஊராட்சிகளை தூய்மையாகவும், சுகா தாரமாகவும் பராமரிப்பதற்கு எனது தலைமையிலான அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.  
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கழிவுப் பொருட்களை சேகரித்தல், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுத்து பாதுகாப் பான முறையில் அப்புறப் படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள 2015-ஆம் ஆண்டு முதல்  ‘தூய்மைக் காவலர்கள்’ ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 9,000 கிராம ஊராட்சிகளில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

திடக்கழிவுகளை சேகரித் தல், பிரித்தல், அவற்றை பாதுகாப்பாக அகற்றுதல், மறு சுழற்சி செய்தல் ஆகிய வற்றிற்கு,   மூன்று சக்கர மிதிவண்டிகள்,  தள்ளுவண்டிகள், குப்பைத் தொட்டிகள், குப்பைகள் பிரித்தெடுக்கும் கொட்டகைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கண்ட ஊராட்சிகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.  
இத்திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படுத்த பிற மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த ஆண்டில், மீதமுள்ள  3,524 கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப் படும். மேலும்,  ஏற்கெனவே இத்திட்டம் செயல் படுத்தப் படும் கிராம ஊராட்சிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.  இவற்றிற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  
இதன் மூலம், இந்தியா விலேயே அனைத்து கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முதல் மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்.

9. முழு சுகாதார தமிழகம் என்ற இலக்கினை அடைய எனது தலைமையிலான அரசு பல்வேறு முன்முயற்சி  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக உருவாக்குவதற்கு அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம்  திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு 15 லட்சத்து 17 ஆயிரம்  தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படும்.  இதனால், மேலும், 4,175 கிராம ஊராட்சிகள் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று,  அதன் மூலம் அவை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக உருவாகும். 

10.குக்கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் ‘தாய்’ திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
‘தாய்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள  சிறுபாசன ஏரிகள் விரிவான முறையில் புனரமைப்பு செய்யப்படும். இந்த ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி இயந்திரங்களின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, மதகு மற்றும் கலங்கல்கள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். 

இதன் மூலம் குக்கிராமங் களில் குடிநீர் தட்டுப் பாட்டினை களையவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழு கொள்ளளவினை மீட்கவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைப்படுத்தவும் வழிவகை ஏற்படும். 

இந்த ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 சிறுபாசன ஏரி களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், ஏரிகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். மேலும் ஊரகப் பகுதிகளில் விவசாயப் பரப்பளவு அதிகரிப்பதுடன், ஊரகப் பொருளாதாரம் உயரவும் வழிவகுக்கும். 

11. கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத் தோட்டம் மற்றும் கழிப்பறை,  ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 ‘அம்மா பூங்காக்கள்’ 100 கோடி ரூபாய் மதிப் பீட்டில் இந்த ஆண்டு அமைக் கப்படும். 

12.   தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளின் தெருக் களில் சுமார் 16 லட்சத்து 46 ஆயிரம்  குழல் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. தெரு விளக்குகளை முறை யாகப் பராமரித்தல், மின்சார செலவினைக் குறைத்தல் மற்றும் ஒளி விளக்குகளின் நீடித்த செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊரகப் பகுதிகளில் உள்ள குழல் விளக்குகள் அனைத்தும்   எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஊரகப் பகுதிகளில், 8 லட்சத்து 24 ஆயிரம் குழல் விளக்குகள்  டுநுனு தெரு விளக்குகளாக 300 கோடி ரூபாய் செலவில் மாற்றிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த ஆண்டு  மீதமுள்ள 8 லட்சத்து  22 ஆயிரம்  குழல் விளக்குகளும் 300 கோடி ரூபாய் செலவில்   டுநுனு தெரு விளக்குகளாக மாற்றியமைக்கப்படும்.  

13.  ஊரகப் பகுதி இளை ஞர்களுக்கு உடல் திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதி களில், ‘அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ அமைக்கப்படும்.
ஒவ்வொன்றும் 10 லட்சம் ரூபாய் செலவில்  500 அம்மா  உடற்பயிற்சிக் கூடங்கள்  50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

14. சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை, உரிய நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில், வங்கிகள் வழங்குவதன் வாயிலாக, பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய  இயலும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்காக,  கடந்த 5 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 460 கோடி ரூபாய்  கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தற்போது நான் வெளியிட்ட இந்த அறிவிப்புகள் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதுடன், அவர்கள் பொருளாதார நிலை உயரவும் வழிவகை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ad

ad