புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

நுவரெலியா மாவட்டத்தில் 185 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மோசடி

நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில்  தோற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது.

போலியான முறையில் அடையாள அட்டைகளை தயாரித்து இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையக் காரியாலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில்  அவர்கள் மேலும் கூறுகையில்,

பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியரில் பலர் அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் பாடசாலைகளில் பதியப்பட்டவர்கள்.

கல்வி நடவடிக்கைகள் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவது மிகவும் ஆபத்தானதாகும்.

சாதாரண தரப் பரீட்சைக்கு ஒரு மாவட்டத்திலும் உயர் தரப் பரீட்சைக்கு மற்றுமொரு மாவட்டத்திலும் தோற்றினால் அந்த இரண்டு மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் அதிகளவு வெட்டுப்புள்ளி காணப்படு கின்றதோ அந்த மாவட்டத்தின் வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் மாணவர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டத் திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad