புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2016

யாழ்வடமராட்சி கிழக்கில் 2கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு! 5 சந்தேக நபர்களும் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து 130 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தெடார்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இன்று காலை கடல்வழியாக கொண்டு வரப்பட்டு கொழும்புக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சா பொதிகள் தொடர்பில் மது வரி திணைகளத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடற்படையின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி மணற்காடு பகுதியில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுத்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்திவந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி இரு பகுதிகள் ஊடாகவும் யாழ்.குடாநாட்டுக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு கொழும்புக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களும் கஞ்சா பொதிகளும் படகும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளன.

ad

ad