புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2016

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள்இருவருக்கும்ஒருமகன் மற்றும் ஒரு பெண் இருப்பதாக வும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்று ம்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடி வரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ad

ad