புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

ஓபி ஜெய்ஷா விவகாரம்: விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை அமைத்தது விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் போட்டியின் 9-ம் நாளில் பெண்களுக்கான மாரத்தான்போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீராங்கனைகள் ஜெய்ஷா மற்றும் கவிதா ராவத் ஆகியோர் களமிறங்கினார்கள் .

இந்த போட்டியின் போது இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என ஜெய்ஷா குற்றம் சாட்டி இருந்தார். 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது : " ஒலிம்பிக் மரத்தான் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு தங்கள் நாடுகளின் சார்பாக ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு வீரர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவுக்கான நிலையங்கள் காலியாக இருந்தன. ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் 8 கி.மீ. இடைவெளியில் ஏற்படுத்தியிருந்த நிலையங்களில் இருந்து பெற்ற தண்ணீர் போதுமானதாக இல்லை. இதர நாட்டு அணியினர் தங்களது வீராங்கனைகளுக்காக 2 கி.மீ. இடைவெளியில் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

எங்களுக்கு இந்திய அணியின் தொழில்நுட்ப அதிகாரிகள் அந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே விதிமுறை. இதர அணிகளிடம் இருந்து நாங்கள் தண்ணீர் பெற முடியாது. இலக்கை எட்டியபோது மயங்கிவிட்டேன். உயிரிழந்துவிடுவேன் என்றே நினைத்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஜெய்ஷா  குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், புகாரை மறுத்த தடகள சம்மேளனம், ஜெய்ஷாவும் கவிதா ராவத்தும் எந்த உதவியும் தேவையில்ல்லை என்று முன்பே கூறிவிட்டதாக தெரிவித்தது. 

இந்த நிலையில், ஒபி ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.ஒருவார காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு பேர் குழுவில்,
விளையாட்டுத்துறை இணை செயலர், இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

ad

ad