புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரினால் 3 ஆம் பிட்டி சந்தியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி பிரதான வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் முறையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
குறித்த காணி சுமார் 2 ஏக்கர் விஸ்தீரினம் கொண்டது எனவும் குறித்த காணி இன்று (23) செவ்வாய்க்கிழமை மதியம் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை செய்யப்பட்டு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி தேவை என இராணுவத்தினர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளாரிடம் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்இமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மன்னார்-யாழ் பிரதான வீதியில் உள்ள மூன்றாம் பிட்டி சந்தியில் சுமார் 2 ஏக்கர் விஸ்தீரினம் கொண்ட காணியினை இராணுவத்தின் தேவைக்காக வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த காணி இன்று(23) செவ்வாய்க்கிழமை நில அளவை செய்யப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டிஇமூன்றாம் பிட்டி மற்றும் அதனை அன்மித்த கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த மக்கள் தமது போக்கு வரத்திற்காக தற்போது இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணிக்கு சற்று தொலையில் நின்றே பேரூந்துகளில் ஏறி பயணம் செய்வதாகவும் தற்போது அப்பிரதேச பெண்கள் மற்றும் யுவதிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக எதிர்வரும் நாற்களில் பெண்கள் இரவு நேரங்களில் தனிமையில் குறித்த பகுதியில் இருந்து பயணிக்கவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் தற்போது மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவம்இமற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக காணிகள் வழங்குகின்றமை என்பவை தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
கடந்த ஆட்சியை விட தற்போதுள்ள ஆட்சியில் மக்களின் மீள்க்குடியேற்றத்தை விட படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்புக்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து மக்களின் முறைப்பாடு தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் தொடர்பு கொண்ட போது இராணுவத்திற்கு காணி வழங்கப்பட்டமையினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் உறுதிபடுத்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.

ad

ad