புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2016

மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம் 24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்க
ப்படவுள்ளதாக மாவட்டச் செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
வவுனியா மாவட்டத்தில் குடியிருப்பு பிரதேசத்தில்   கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசம் முகாமாகவிருந்த  கலாச்சார மண்டபம் எதிர் வரும்  24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவத்தினரால்  மாவட்டச் செயலகத்திற்கு உத்தியோக பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்களில் விடுவிக்கப்படக் கூடிய நிலங்கள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை வவுனியா மாவட்ட இராணுவத் தலமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது குறித்த கலாச்சார மண்டபம் , செட்டிகுளம் மெனிக்பாம் முகாம் பகுதி உள்ளிட்ட நிலங்களை அரச அதிபரிடம் ஒப்படைக்க படையினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதன் பிரகாரம் கலாச்சார மண்டபம் 24ம் திகதி புதன் கிழமை கையளிக்கவுள்ளதாக படையினரால் தற்போது மாவட்ட அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிப்பின் 26 ஆண்டுகளின் பின்பு குறித்த மண்டபம் மீண்டும் நகரசபையினர் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலை ஏற்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நன்மை பயக்கும் எனத் தெரிய வருகின்றது.

ad

ad