புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2016

கடலில் தவித்த 6,500 அகதிகளை மீட்டது இத்தாலி

லிபியா கடல் பகுதிக்கு அப்பால், தவித்துக் கொண்டிருந்த 6,500க்கும் அதிகமான படகு அகதிகளை ஒரே நாளில் இத்தாலிய கடலோரக்
காவல்படை மீட்டது. ஒரே சமயத்தில் 40க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளை இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து மேற்கொண்டன.
லிபியாவின் சப்ரத்தா நகரிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் இந்த அகதிகள் மீட்கப்பட்டனர். ஒரே பகுதி யிலிருந்து மட்டும் 1,100 மீடகப் பட்டிருப்பதாக இத்தாலிய அதிகாரிகள் கூறினர்.
லிபியாவில் போரினால் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையற்ற சூழல் காரணமாக, பணத்திற்காக அகதிகளைக் கடத்திவரும் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
மீடகப்பட்ட அகதிகளில் பெரும்பாலோர் எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புக் கப்பல்களை கண்டவுடன் அகதிகள் பலர் கடலில் குதித்து நீந்தி மீட்புக் கப்பலை அடைந்தனர்.
அளவுக்கு அதிகமாக அகதிகளைச் சுமந்து வந்த படகுகள், கடலில் அல்லாடிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் படகுகளில் கையில் குழந்தைகளுடன் பல தாய்மார்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

ad

ad