புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2016

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய குற்றச்சாட்டு விசாரிக்க அரசு தயார்!

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்த தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் முன்னாள் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.வட மாகாண  அமைச்சர்களுடன் தான் நடாத்திய சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராய்நதிருந்ததாகத் தெரிவித்தார்.

இதன்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் தொடர்பில் ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தயாரிக்குமாறும் கோரியுள்ளேன் என்றும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கு ஏதாவது நோய்கள் ஏற்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவும் அரசாங்கம் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபையுடன் இணைந்து இது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், தேவையான வைத்தியர்கள் இந்த நாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் அவர்களால் முடியாமல் போகுமாயின் சர்வதேசத்தை நாட முடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ad

ad