புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

மக்களுடைய நிலத்தில் இருக்கும் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்

போர் காரணமாக மக்கள் வெளியேறிய இடங்களில் படையினர் தங்கியிருக்கின்றனர். மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் வகையில்,
படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில், கிளிநொச்சி இரணைதீவு கிராமத்தில்; இருந்து 1992ஆம் ஆண்டு போர் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் அங்கே மக்களுடைய நிலத்தில் கடற்படையினர் தங்கியிருக்கின்றனர். மேலும் மக்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில் இல்லாத இரணைமாதா நகரில் குடியேற்றப் பட்டிருக்கும் நிலையில் மக்களுடைய வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்படுகின்றது.
எனவே மக்களுடைய நிலத்தில் இருக்கும் கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுடன் மக்களுடைய நிலம் மக்களிடமே மீளவும் வழங்கப்படவேண்டும் என எதிர்வரும் 24ஆம், 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கோரிக்கை விடுவோம்.
இதனோடு யாழ்ப்பாணம்- மயிலிட்டி பகுதியின் மீள்குடியேற்றத்தையும் வலியுறுத்துவோம். அதற்காக இன்றைய தினம் (நேற்று) மயிலிட்டி பகுதிக்கும் செல்கிறோம்.
முன்னர் வடமாகாண மீனவர்கள் தெற்கிலும், தென்பகுதி மீனவர்கள் வடக்கிலும் கடற்றொழில் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சட்டத்திற்கு மாறான தொழில்களை செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது. அவ்வாறான தொழில்களை செய்பவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? முஸ்லிம்களா? என பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டும்.
அவ்வாறான சட்டவிரோத தொழில்களை நாம் எதிர்ப்போம். மேலும் தென்னிலங்கை மீனவர்கள் அதிகளவில் இங்கே வருவதற்கான அனுமதியை கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரே வழங்கி வருகின்றார். இதனை நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கும் கூட சுட்டிக்காட்டியிருக்கின்றோம். மேலும் வடமாகாணத்தில் உள்ள உள்ளுர் இழுவை படகுகளைவும் நாம் கட்டுப்படுத்த வேண்டியதாக உள்ளது- என்றார்.

ad

ad