புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘கெடு’

சங்க தலைவர் எஸ்.தாணு தலைமை தாங்கினார். இ
தில் செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் தேனப்பன், கதிரேசன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.இதில் நடிகர் விஷால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு

அளித்த பேட்டி குறித்து விவாதிக்கப்பட்டது. விஷால் அளித்த பேட்டி யில் ‘தயாரிப்பாளர் சங்கம் ஆக்கப்பூர்வமாக செயல் படவில்லை. நடிகர் சங்க தேர்தலை கையில் எடுத்தது போல ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும்” என்று கூறி இருந்தார். இதுபற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள் தெரி விக்கப்பட்டன. பின்னர் விஷால் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதில், நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அவமரியாதை செய்யும் வகையில் ஒரு வாரப் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதற்கு இந்த கூட்டம் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது.ஒரு வார காலத்துக்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண் டும். அப்படி தவறினால் தீபாவளி வெளியீடாக அறிவித்துள்ள ‘கத்தி சண்டை’ திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த தமிழ் திரைப்படங்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர் சங்கமும், தயாரிப்பாளர் களும் ஒத்துழைப்பு வழங்கு வதில்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. 
இதுகுறித்து நடிகர் விஷா லிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 
தயாரிப்பாளர் சங்க தீர்மானம் குறித்து இதுவரை எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. முறைப்படி அவர்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்ததும் விளக் கம் அளிப்பேன்.

இவ்வாறு விஷால் கூறி னார்.

ad

ad