புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

மிக்” கொள்வனவு ஆவணங்கள் அழிவு :உடனடி விசாரணைக்கு உத்தரவு

மிக் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அத்துடன் இந்த விவகாரத்தில் சாட்சியங்களை மூடிமறைப்பதற்கு எவராவது முயற்சித்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி கைது செய்யுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ரஷ்யாவிற்கான முன்னாள்  தூதுவர் உதயங்க வீரதுங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள மிக் விமான கொள்வனவு ஒப்பந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னிலையாகியிருந்த பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாக மன்றில் அறிவித்தனர்.

இதனை கவனத்திற்கொண்ட நீதவான் லங்கா ஜயரத்ன, இதுகுறித்த உடனடி விசாரணைகளுக்கு உத்தரவிட்டார்.

அதுமட்டுமன்றி இந்த விவகாரத்தில் தகவல்களை மூடிமறைக்கும் நோக்கத்தில் இதனை எவராவது செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை தேவை என்பதோடு அவ்வாறு செய்திருந்தால் அவர்களையும் கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.  

இதேவேளை உதயங்க சம்பந்தப்பட்ட மிக் விமான கொள்வனவு மோசடி வழக்கு விசாரணைகள் இதற்கு முன்னர் கல்கிஸை நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்த வேளையில் இவ் ஒப்பந்தம் தொடர்பான மூலப் பிரதிகள் அங்கு சமர்பிக்கப்பட்டிருந்தன.

எனவே அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை மன்றில் அடுத்த அமர்வின்போது சமர்பிக்குமாறு பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவிற்கு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பிலான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகிவரை ஒத்திவைக்கப்பட்டது.   

இதேவேளை இந்த வழக்கு கடந்தஜுன் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அந்த வகையில் அவரை கைது செய்வதற்கான அழைப்பாணையை கொழும்பிலுள்ள அவரது இல்லத்திற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad