புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு சைவ உணவகம் ஒன்றிலிருந்தேஉணவை வாங்கி வந்திருப்பதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம்
கலந்திருந்தமையே காரணமென பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றுத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 8.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் காலை 7.00 மணியளவில் உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் தனது மகன் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் நிலையில் அது தொடர்பிலான ஆவணம் ஒன்றில் கையெழுத்திட மகன் கல்வி பயிலும் பாடசாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாய் பாடநாலைக்கு சென்று மீளவும் வீடு திரும்பியுள்ள நேரத்திற்குள் மகன் தாய்க்கு தொலைபேசி அழைப்போன்றினை எடுத்துள்ளதாகவும், மகன் பேசியது சரியாக கேட்காததினால் அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்து தகப்பனார் 
இந்தநிலையில் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மூவரின் சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் வைத்திய அதிகாரி உணவில் விசமிருந்ததனாலேயே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளதுடன், எனினும் உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில், மூவரின் உடற்பாகங்களையும் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் மூவரின் சடலங்களையும் தகனம் செய்யக்கூடாது எனவும், அவற்றை அடக்கம் செய்யுமாறும் பொலிஸ் வட்டாரத் தரப்பில் உறவினர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மூவரின் உடலங்களும் மட்டக்குளியிலுள்ள அவர்களது உறவினரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ad

ad