புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

.நா.செயலாளரின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளைய தினம்  வருகை   தருவதை முன்னிட்டு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்து பேரின வாத அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ள நிலையில் அரசியல் கைதிக ளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் மக்களை புறம்தள்ளாமல் பான் கீ மூன் கிழக்கிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு போரட்டத்தில் ஈடுப்பட உள்ளது.

சர்வதேச விசாரணைக்கான ஆயத்தப்படுத்தல்களை முன்னெடுக்கவே பான் கீ மூன் இலங்கை வருகின்றார் என தெரிவித்துள்ள அந்த அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட உள்ளன.

மேலும் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் வகையில் கிழக்கிற்கு விஜயம் செய்யாமை மற்றும் முஸ்லிம் தலைமைத்துவங்களை சந்திக்காது செயலாளர் நாயகம் செல்கின்றமை, கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றம் குறித்து கவனத்தில் கொள்ளாமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி ஐக்கிய சமாதான முன்னணி கவனயீர்ப்பு போராட்டதில் ஈடுபட உள்ளது.

இராணுவத்தை பழிவாங்கவும் கடந்த ஆட்சியாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் மண்டியிட வைப்பதற்கான ஆயத்தப்படுத்தல்களுக்காகவே பான் கீ மூன் இலங்கை வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளரும் தேசிய அமைப்பாளருமான வசந்த பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக தாம் ஆர்ப்பா ட்டத்தை முன்னெடுக்க உள்ளதுடன் கண்டன மகஜர் ஒன்றை கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும் இத ற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளன.  இந்த போராட்டத்தை ஐக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்து ள்ளது.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றை மையப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ad

ad