புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

போக போக பொறுத்திருந்து பாருங்கள் : சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில்
ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி  நள்ளிரவு 12.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம்  மூலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’அழைத்திருப்பதால் நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளேன். இதுவரை எந்த பிரச்சனையும் நீதிமன்றம் முடித்துவிட்டு செல்லும் வரை சொல்ல முடியாது. டெல்லி நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன். எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம். கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம். எனது நடவடிக்கைகள் போக போக பொறுந்திருந்து பாருங்கள். 

ஒருவர் குற்றம்சாட்டினால் மற்றொருவர் மறுப்பது ஜனநாயகத்தின் இயல்பு தான். பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும் மரியாதை வேண்டும்.  பெண்களின் பாதுகாப்பை ஊடகங்கள் தான் சரியான பணியை செய்து வருகின்றனர். நீங்கள்(ஊடகம்) பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான் நான் வந்தேன். நீங்கள் சரியாக செய்ததால் தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கலங்கப்படுத்தாதீர்கள். அது சுவாதியாக இருக்கட்டும் விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தாதீர்கள். விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண். பெண்களை கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசாங்க பணியை செய்ய வழிவிட வேண்டும். நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சியாகவும் இயக்கங்கள்,  தலைவராகவும் இருந்தாலும் தானாக இயங்க வேண்டும். சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது.  அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்’’என்று தெரிவித்தார்.

ad

ad