புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவை கண்டித்ததற்கு அவர் பதவி விலகி இருக்க வேண்டும்; ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. அரசை கண்டித்து ‘தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் மதுரை தெற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் கண்டன பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசிய காரணத்தினாலும், ஆளும்கட்சியினர் பேசுவது பற்றி கேள்வி எழுப்பிய காரணத்தினாலும் தான் நாங்கள் நீக்கம் செய்யப்பட்டோம். 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தி.மு.க. சட்டமன்றத்தில் பேசினால், ஆளும் கட்சியினரால் பதில் அளிக்க முடியவில்லை. அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடுமோ என்ற அச்சத்தில் தான் எங்களை நீக்கம் செய்து விட்டார்கள். தி.மு.க. மீதும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வேண்டும் என்றே சபாநாயகர் களங்கம் ஏற்படுத்துகிறார்.

தற்போது வேண்டும் என்றே எங்களை பேச விடாமல் செய்வதற்காக சதி செய்தே எங்களை சட்டமன்றத்தில் இருந்து நீக்கம் செய்து விட்டார் சபாநாயகர். அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மட்டும் செயல்படுகிறார். எதிர்க்கட்சிக்கு குறைந்த உறுப்பினர்கள் இருந்தால் கூட சட்டமன்றத்தில் அவர்களின் கருத்துகளை பதிவு செய்வது சபாநாயகரின் கடமை. ஆனால் தற்போதைய சபாநாயகர் அவ்வாறு செயல்படுவதில்லை. இந்திய சட்டமன்ற வரலாற்றில், ஒரு தலைப்பட்சமாக செயல்படும் சபாநாயகர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் செயல்படுகிறார்.

அ.தி.மு.க.விற்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்களைப் பற்றி கருத்து கூறும் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடுவதிலேயே குறியாக உள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்துள்ளனர்.
பிற கட்சிகள் கூறும் கருத்துகளை சகித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றமே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கண்டித்து உள்ளது. இதற்கு அவர் இந்த நேரம் பதவி விலகி இருக்க வேண்டும்.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போது தான் ஆளுங்கட்சியின் வண்டாளம், தண்டவாளத்தில் ஏறும். மக்களுக்கு உண்மை நிலை புரியவரும். இவ்வாறு பேசினார்

ad

ad