புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுமென்ற செய்தியை மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு

கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள இராணுவ முகாம்களில் 64 முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக கடந்த வாரம் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது

இந்நிலையிலேயே சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வில்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்போது காணப்படும் சுமூகமான நிலையை தொட ர்ந்தும் பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது


AddThis Sharing But

ad

ad