புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ப்பட்டுள்ளார்.

குறித்த கைதியை உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் தெரிவித்தார்.

இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவரை உடனடியாக சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் சார்ள்ஸ் நிர்மலாநாதன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று தாம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக அநுராபுரம் சிறைச்சாலை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

குறித்த அரசியல் கைதியை உடனடியாக சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றி வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சுவாமிநாதன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய இராசையா ஆனந்தராசா என்ற குறித்த கைதி, வைத்தியப் பரி சோதனைகளுக்காக யாழ். போதானா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விட யத்தையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உறுப்படுத்தினார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாகவே தனக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா ஆனந்தராசாவும், கடந்த 8ஆம் திகதி அவர்களை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டிருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்த இராசையா ஆனந்தராசா, மீண்டும்  2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை விடுதலையை வலியுறுத்தி ஆனந்தராசா, தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட நிலையிலேயே அவருக்கு ஊசியொன்று ஏற்பட்டப்பட்டுள்ளது.

பின்னர் இறுதியாக  கடந்த மாதம் 18 ஆம் திகதி மீண்டும் ஊசி ஏற்றப்பட்டதாக குறித்த அரசியல் கைதியான ஆனந்தராசா தெரிவித்ததாக, சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ad

ad