புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

இணையத் தளங்களினூடாக பொருட்கள் வாங்குவோருக்கு எச்சரிக்கை.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக்
கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாகவும் கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்களை தருவிப்பவர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் பலவந்தமாக நுழையும் கொள்ளையர்கள், குறித்த நபர்களின் கணக்குகளில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணங்களை வைப்பிலிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான பணக்கொள்ளை தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 10 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

ad

ad