புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற எனது கனவு பறிக்கப்பட்டுவிட்டது: நார்சிங் யாதவ்

ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி  நார்சிங் யாதவிற்கு நற்சான்றிதழ் அளித்து  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நார்சிங் யாதவ் பிரேசிலுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 

அவரது தொடக்க சுற்றுப்பந்தயம் இன்று நடைபெற இருந்த நிலையில்,  வாடா என்னும் உலக  ஊக்க மருந்து தடுப்பு கழகம் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் நார்சிங் யாதவிற்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் சுற்று போட்டி துவங்க 12 மணி நேரமே இருந்த நிலையில், போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு பேரதிர்ச்சியை தந்ததாக நார்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். 

நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது பற்றி நார்சிங் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விளையாட்டு தீர்ப்பாயத்தின் முடிவால் நிலைகுலைந்துள்ளேன். இந்த விவகாரத்தை கடந்த இரண்டு மாதங்களாக சந்தித்து வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், எனது முதல் சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு  12 மணி நேரத்திற்கு முன் இந்தியாவுக்காக ஆடி பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவு பறிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், நான் குற்றமற்றவன் என்பதை நிருபீக்க அனைத்தையும் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ad

ad