புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

புங்குடுதீவினில் புதிதாய் பிறந்து ............
----------------------------------------------------------------------

கடந்த மாதம் 32 வருடங்களின் பின் என்  தாஸ் மண்ணை முத்தமிடடேன் .ஒரு  புறம் அளவில்லா  மகிழ்ச்சி தான் .இருந்தாலும் என் கண்களை நாத்தான்  என்  தாய்  மண்ணின்  முனகல்கள் ,ஓலங்கள் ,காயங்கள், எலும்பு எச்சங்கள் . நாம் பிறந்த மண்ணையே  நாசமாகிய  அந்த சமூக விரோதிகள்  எங்கிருந்தும் வரவில்லை எம் மண்ணில் அவதரித்த  களைகள் தான் .அணைத்து கோவில்களும்  கல்விசாலைகளும் மட்டுமே கண்ணுக்கு  வண்ணங்களாக  வடிவு கொடுக்கின்றன . ஆனால் தூய பக்தர்களோ ,துல்லியம் தேடும்  மாணாக்கர்களோ அங்கில்லை . எம் மூதாதையர் முழு இலங்கையிலும் ஓடி ஓடி  இல்லறம் முழுதாய் துறந்து  இரத்தம் சிந்தி தூக்கம்  இன்றி  கூடாய் கட்டிய அந்த அழகிய  சிட்பக்கலையின் அட்புத வீடுகள் அரக்கர்களின் இரக்கமுள்ள பிடுங்கல்களினால்  அத்திவா ரத்தோடும்  அரைச் சுவரோடும் நிர்வாணிகளாய்  அல்ல அல்ல பிச்சைக்காரர்களாய் எலும்பு கோடுகளாய்  என் வயிற்றை பிடுங்கியது  இவர்களும் மனிதர்களா . என் அவசர  16 நாள் பயணத்தில்  பயண  நேரம் போக   மீதி 13 நாட்களையும் என் தாய் மண்ணில்   எப்படி அங்கிருந்து வந்தேனோ அதே  எளிமையான மனிதனா க  அந்த புழுதி காற்றில்  புரளவே புறப்பட்டு  சென்றேன் .ஏனெனில் நான் ஒன்றும் உல்லாசம் தேடி போகவில்லை என் தாயநிலத்தை  காணத்தான் ஓடி சென்றேன் அப்படியே  புங்குடுதீவு மண்ணிலேயே  அந்த  வெப்ப கோட்டில் என்  அகன்ற விழிகளின்  தேடல்களில்  செவிப்பறையில் விழுந்த  விசாரணைகளில் சங்கமம் ஆக்கி  வந்தேன் . என்  சொந்தங்களை உறவுகளை கூட  ஓடி ஓடி காணவில்லை  .இருந்தாலும் புங்குடுதீவுக்கு எங்கோ இருந்து ஒரு ஒளி வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது  என்பது மட்டும் உணர்ந்து கொண்டேன்   இன்னும் மனிதர்கள்  இக்ரிமார்கள்  மண்ணை நேசிக்கிறா ர்கள்  போலும் . கிழக்கே  மடத்துவெளி ஊரதீவு பக்கமாக  எங்கள்  சிட்பி  கண்ணாடியும்  சிறுப்பிட்டி பக்கமாக   பண்ணை அமைப்பில் லண்டன் கிருஷ்ணபிள்ளையும்  நடுவுதுருத்தியில்  பிரான்ஸ்  குமாரதாஸ்  அவர்களும் மத்தியில்  உலகமையமுமாக  இன்னும் மடத்துவெளி ஊரதீவு  சிவலைப்பிட்டி சனசமூக நிலையங்களின்  உபசரிப்புமாக  என்  தாயானவள் மறுபிறப்பெடுப்பால் என்ற நமபிக்கையை சுமந்து வந்துள்ள்ளேன்  இன்னும் தொடர்வேன் 

ad

ad