புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

பெளத்த, சிங்கள மயமாக்கலுக்காகவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் – வட மாகாணம்

ஜெனீவாத் தீர்மானத்தில் மீள் நிகழாமை என்பது முக்கியமான விடையமாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நாட்டை பேரழிவுக்குத்
தள்ளிய மூன்று தசாப்தகால யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த வடக்கு-கிழக்கில் தமிழரின் அடையாளங்களை சிதைத்து, சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதற்காகவே ஆயதப் போராட்டம் முடிந்ததும் முன்னைய மஹிந்த அரசு  வேகவேகமாக முன்னெடுத்த வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் திட்டங்களை தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கமும் பெரும் எடுப்பில் முன்னெடுத்து வருவதாகவும் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் வட மாகாண சபை உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.
இதனாலேயே மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பில்லை என்பது சிறிலங்கா அரசிற்கு நன்கு தெரிந்திருந்தும் ‘தேசிய பாதுகாப்பை காரணம் காட்டிக்கொண்டு, இராணுவத் தளங்களை விஸ்தரிப்பதிலும், பலப்படுத்துவதிலும் தற்போதைய அரசாங்கமும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு  நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையிலான வட மாகாண சபை உறுப்பினர்களை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடினர்.
வட மாகாண சபையின் அமைச்சர்களும் எதிர்கட்சித் தலைவரும் கலந்துகொண்டிருந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாகவும்  சுட்டிக்காட்டிய வட மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமெரிக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
வடக்கு-கிழக்கில் தொடரும் சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் அமெரிக்கத் தூதுவரிடம் முறையிட்டுள்ளதாகவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவந்த தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கு அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் இருக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

ad

ad