புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த
லைவர் நிகொலஸ் சார்கோஸி அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தனது மைய வலதுசாரி குடியரசு கட்சியின் நவம்பரில் இடம்பெறும் முதன்மை வாக்கெடுப்பில் வேட்பாளர் அந்தஸ்த்தை பெறவேண்டி உள்ளது.
“எமது வரலாற்றில் வேதனையான தருணத்தில் அதற்காக போராடுவதற்கு வலுவான தலைமையை வழங்க என்னால் முடியுமாக உள்ளது” என்று சார்கோஸி வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் கடந்த 2015 ஜனவரி தொடக்கம் பல்வேறு தாக்குதல்களுக்கும் முகம்கொடுத்து வருகிறது.
61 வயதான சார்கோஸி 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சோசலிசவாதியான பிரான்கொயிஸ் ஹொலன்டேவிடம் தனது இரண்டாவது தவணைக்கு தோல்வி அடைந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் தொடர்பில் சார்கோஸி பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொண்ட போதும் அவர் இதுவரை எந்த விடயத்திலும் குற்றங்காணப்படவில்லை.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு சுற்றுகளாக இடம்பெறவுள்ளது. 

ad

ad