புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது
மதுரை உயர்நீதிமன்றம். ' மதுரைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதும் தெரியும். உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது ஜாமீன் வாங்குவேன்' எனக் கொதிக்கிறார் சசிகலா.
அ.தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தொடர் வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. பணிப்பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மனுத் தாக்கலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, அரசுத் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, ' முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றார் சசிகலா. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்போது, 'இம்மனுவை தாக்கல் செய்ய நான் அறிவுறுத்தினேன்' என ஜாமீன் கோருபவரின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன' என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி முன்வைத்த வாதங்களை அடுத்து, ' ஆகஸ்ட் 29-ம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார் நீதியரசர். 
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் சசிகலா பார்வைக்குக் கொண்டு சென்றனர் அவரது வழக்கறிஞர்கள். அவர்களிடம் பேசியவர், " கையெழுத்து என்னுடையதுதானா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் கேட்டுள்ளனர். இதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது வாங்குவோம். ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க மாட்டேன்" என்றவர், " கார்டனுக்குள் நடந்த கொடுமைகளை நான் மறக்கவில்லை. அவர்கள் என்னை அடித்தது மட்டுமல்ல, கார்டன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள். இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் மேல்-சபையில் பேசினேன். இப்போது சமரசம் என்ற பெயரில் பேசுகிறார்கள். அவர்களின் சமரசத்திற்கு உடன்பட்டால், நான் அடி வாங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கட்சியில் இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கும் பதவிகள் பெற்றதற்கும் கடவுள்தான் காரணம். ஜெயலலிதா அல்ல. முன்ஜாமீன் வாங்குவதற்காக மதுரைக்குள் வந்தால், என்ன செய்வார்கள் என்பதும் தெரியும். அதற்கு இடம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. சட்டரீதியாகவே போராடுவோம்" எனப் பேசியிருக்கிறார். 
ஆகஸ்ட் 29 அன்று நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் உத்தரவை அடுத்தே, சட்டரீதியான போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிரான ஆட்டத்தையும் அவர் கைவிடுவதாக இல்லை

ad

ad