புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

சிறைச்சாலையில் நாமலுடன் இரகசிய சந்திப்புகள் ; பிரதமரும் சம்பந்தம்?

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நாமலை பார்க்க, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ
எனப்படும் ”பொடி சொப்”(‘Podi Choppe’) பிரதமரின் சிறப்பு செய்தி ஒன்றுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று(16) சென்றுள்ளார்.
ஒரு விடயம் தொடர்பாக உரையாடவே நாமலை பார்க்க திடீரென சென்றேன் என கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.
பொடி சொப்பே உடன் காமினி லொக்குகே, ஜயந்த வீரசிங்க, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பல தொழிலதிபர்கள் சென்றுள்ளார்கள்.
மற்றையவர்கள் வருகைத் தருவதற்கு முன்னர் நாமலும், கித்சிறியும் தங்களது இரகசிய வார்த்தையை பகிர்ந்துக் கொண்டிருப்பார்கள் என்று ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் மற்றையவர்கள் வருகை தந்தவுடன் கித்சிறியை நாமல் மற்றையவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் எந்த பிரச்சினைகளையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் உருவாக்க முடியாது என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் தற்போது சிறையில் கம்பிக்கு பின்னால் இருப்பதற்கு பைஸர் முஸ்தபாவே காரணம் என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

ad

ad