புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2016

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த கணவர்..! அமரர் ஊர்தி தர மறுத்த அரசு .


பழங்குடியினர் ஒருவருக்கு மருத்துவமனை அமரர் ஊர்தி வழங்காததால், அவர் தனது இறந்த
மனைவியை தோளில் தூக்கி கொண்டு சென்ற பரிதாப சம்பவம் ஒடிஷாவில் நடைபெற்றுள்ளது.

அமங் தேய் என்ற 42 வயதான பெண்மணி காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து அவரது கணவர் தானா மஞ்சி தனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அமங் தேய் இறந்துள்ளார். இதையடுத்து தனது மனைவியின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் வண்டி கேட்டுள்ளார் தானா மஞ்சி. ஆனால், ஆம்புலன்சிற்கு பணம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை அதிகார்கள் கறாராக தெரிவித்துவிட்டது. 
ஆனால், தானா மஞ்சியிடம் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம், இல்லாமல் அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், தானா மஞ்சி பலமுறை கேட்டுப் பார்த்தும் , அமங்கின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை அமரர் ஊர்தி தரவில்லை.விரக்தியடைந்த தானா மனைவியின் உடலை ஒரு துணியில் சுற்றி தனது கிராமமான மெல்காராவுக்கு நடக்க ஆரம்பித்துவிட்டார். பவானிபட்னாவில் இருக்கும் மருத்துவமனையில் இருந்து அவரது கிராமத்திகு 60 கிலோமீட்டர்.
தானாவுடன் அழுதபடியே, அவரது 12 வயது மகளும் சாலையில் நடக்க ஆரம்பித்தனர். அதைப் பார்த்த சில பத்திரிக்கையாளர்கள், அந்த மாவட்டத்தின் கலெக்டரிடம் விஷயத்தைத் தெரிவித்து, மீதி பயணத்துக்கான ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டது.



தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தானா, " மருத்துவமனை அலுவலர்கள் வாகனங்கள் இல்லையென தெரிவித்துவிட்டனர்.நான் மிகவும் ஏழை, மனைவியின் உடலை எடுத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்திக்கொள்ளும் அளவு பணம் இல்லை என கூறினேன். நான் பலமுறை அழுதும், அவர்கள் மனம் இறங்கி எனக்கு உதவ முன்வரவில்லை" என்றார்மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த கணவர்..! அமரர் ஊர்தி தர மறுத்த அரசு . 

ad

ad