புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்



இலங்கையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுநிலைப்பாட்டில் செயற்படுவதற்கு தயாரென
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் –
”நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இதற்கு மேல் ஒரு யுத்தம் வேண்டாம். எமது பிள்ளைகள் இதற்கு பின்னர் மரணிக்க வேண்டிய அவசியம் இல்லை. யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாம் புதிய அரசியலமைப்பொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். நாட்டை பிளவுபடுத்தாமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முயல்கின்றேம். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டும். நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளும் இவ்விடயத்தில் கரிசனையுடன் செயற்படுகின்றன” என்றார்.

ad

ad