புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற முடியும் என யாழ் பல்கலைக்கழக மோதலின் போது காயமடைந்த சிங்கள மாணவன் தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை
மீளப்பெற முடியும் என யாழ் பல்கலைக்கழக மோதலின் போது காயமடைந்த சிங்கள மாணவன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில்
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் அண்மையில் நடைபெற்ற மோதல்  சம்பவத்தில் தொடர்புபட்டு  காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவரால் மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட 3 தமிழ் மாணவர்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர் ஒன்றியத் தலைவர் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் அவருடைய வழக்கும் ஏனைய 3 தமிழ் மாணவர்களுடைய வழக்கும் விசாரணைக்காக இன்றைய தினம் (25) திகதியிடப்பட்டிருந்தது.
அதே போன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவரால் குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக 4 சிங்களமாணவர்களுக்கு எதிராக பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுடைய வழக்கு விசாரணை செப்ரம்பர் மாதம் முதலாம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கென பல்கலைக்கழக சமூகத்தால் 3 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளக விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் அனைத்து மாணவர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மோதல் தொடர்பாக தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையே உள்ள முரண்பாட்டினை நீடிக்காமல் இரு பகுதியினருக்குமிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பாக பல்கலைக்கழக சமூகத்தினருடனும் மாணவர்களுடனும் விசேட விதமாக ஜனாதிபதி மற்றும் உயர் கல்வி அமைச்சர் உட்பட பலர் கலந்துரையாடியிருந்தனர்.
ஜனாதிபதியினுடனான கலந்துரையாடலின் பின்னர் இருபகுதியினரும் உடன்பாட்டுக்கு வந்திருந்த நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து அதன் மூலமே இரு பகுதி மாணவர்களுக்கிடையில் சமரச நிலையை உண்டு பண்ண வேண்டும் எனவும் குறித்த பிரச்சனையை பொலிஸ் மற்றும் நீதிமன்றம் என கொண்டு செல்லாமல் சுமூகமாக தீர்க்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது.
எனவே உயர்கல்வி அமைச்சரின் அறிவுரைக்கமைய நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் மோதலுடன் தொடர்புபட்ட தமிழ் சிங்கள மாணவர்கள் உட்பட்ட பல்கலைக்கழக சமூகத்தினர் ஒன்றிணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் அனைத்து மாணவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் இருபகுதியினரும் இருபகுதிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பட்டினை மீளப்பெறுவதாக தீர்மானித்திருந்தனர்.
அதற்கான கடிதம் ஒன்றில் இருபகுதியினரும் நேற்றைய தினம் கையொப்பம் இடுவதாகவும் முடிவுசெய்தருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மேற்குறித்த கடிதத்தில் கையெழுத்திட அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிங்கள மாணவன் தான் தற்பொழுது கையொப்பம் இட முடியாது எனவும் வடமாகாண ஆளுநர் ஆரம்பத்தில் இருந்து எமக்கு துணையாக இருந்து வந்துள்ளார் எனவே அவருடைய சம்மதத்தனை பெற்ற பின்னரே கையெழுத்திட முடியும் என தெரிவித்துள்ளார் அத்துடன் தான் வீட்டிற்கு தற்போது செல்லவுள்ளதாகவும் வீட்டாருடனும் கலந்துரையாடிய பின்னரே கையெழுத்திட முடியும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்களுடைய வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் குறித்த சிங்கள மாணவனின் செயற்பாட்டு தமிழ் மாணவர்கள் மத்தியில் சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உள்ளக விசாரணைக்குழு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிய வருகிறது.

ad

ad