புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

டென்னிசும் கைகொடுக்கவில்லை: வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது சானியா-போபண்ணா ஜோடி

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. பதக்க கணக்கை தொடங்க முடியாமல்
போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, டென்னிசும் காலை வாரியது.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி 6-2, 2-6 (3-10) செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்- ராஜீவ் ராம் இணையிடம் நேற்று முன்தினம் வீழ்ந்தது.

இறுதி வாய்ப்பை பறிகொடுத்த இந்திய ஜோடி அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நேற்று செக்குடியரசின் லூசி ஹடெக்கா- ராடக் ஸ்டெபனக் இணையுடன் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மோதியது. இதில் முதல் செட்டில் எதிர்ப்பின்றி பணிந்த இந்திய ஜோடி 2-வது செட்டில் 5-5 என்று வரை போராடி பார்த்தது. ஆனாலும் அனுபவம் வாய்ந்த எதிர் ஜோடியின் சாதுர்யமான ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை. முடிவில் ஹடெக்கா- ஸ்டெபனக் ஜோடி 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சானியா-போபண்ணா கூட்டணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற சானியாவின் கனவு மீண்டும் தகர்ந்து போனது. 

ad

ad