புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2016

நடிகர் கமலுக்கு செவாலியர் விருது அறிவிப்பு






நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருதை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது வழங்கி பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சகம் கவுரவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

1959ல் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது, 18 பிலிம்பேர் விருதுகள். 1990ல் பத்மசிஸ்ரீ விருது, 2005ல் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், 2014ல் பத்ம பூசன் விருது பெற்றுள்ளார். மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள் பெற்றுள்ளார். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

செவாலியர் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, திரைப்படத்துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பிரான்ஸ் அரசு அறிவித்த செவாலியர் விருதை பெருமிதத்துடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கமல் கூறியுள்ளார். மேலும், இனி நான் செய்ய வேண்டியது கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாக விருதினை உணர்கிறேன். நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் சத்ய ஜித்ரேவை என் கரம் கூப்பி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

ad

ad