புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

வடக்கில் இணைந்த நேரஅட்டவணை அடுத்தமாதம்முதல்அமுல்

வடமாகாண போக்குவரத்தில் இணைந்த நேரஅட்டவணை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும், நேர அட்டவணையினை பின்பற்ற தவறும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இன்று (வெள்ளிக்கி ழமை) தெரிவித்தார்.

வடமாகாண போக்குவரத்து மற்றும் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் குருநகரில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூட த்தில் இன்று நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலில், வடமாகாணத்தில் உள்ள போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண முகாமையாளர், போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தனியார் போக்குவரத்துச் சபையினர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது, இணைந்த நேர அட்டவணையினை அமுல்படுத்தவது குறித்தும் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்தும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பிரகாரம், அனைவரின் ஒத்துழைப்புடன் இணைந்த நேர அட்டவணையினை அமுல்படுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்தவகையில், போக்குவரத்து நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாண தேசிய போக்குவரத்து அதிகார சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. நியதிச்சட்டத்தின் ஊடாக வடமாகாண போக்குவரத்து அதிகார சபைக்கான ஆளணி நியமனமாக 150 இளைஞர்களு க்கான நேரக்கணிப்பாளர் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளன.

போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இணைந்த நேரஅட்டவணையினை பின்ப ற்றாமை இருக்கின்றது. இணைந்த நேர அட்டவணையினை இலங்கை போக்குவரத்துச் சபை யினரும், தனியாரும் பின்பற்றாமையினால் பல விபத்துக்கள் இடம்பெற்றதுடன், பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad