புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் "Godless

Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது. 
69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா நேற்று சனிக்கிழமையுடன் (ஆகஸ்டு 13) முடிவுக்கு வந்தது. மொத்தம் 279 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக சர்வதேச திரைப்படங்கள் வரிசையில், புதிய இயக்குனர்களுக்கு அநேக வாய்ப்பளிக்கபப்ட்டது. அதோடு போட்டியில் பங்குபற்றிய 17 சர்வதேச திரைப்படங்களில் 8 திரைப்படங்கள் பெண் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் இரு திரைப்படங்கள் உயரிய விருதுகளை வென்றிருந்தன. 
மெக்ஸிக்கன் இயக்குனர் ஆர்டுரோ ரிப்ஸ்டெயின் தலைமையில் அனைத்து போட்டிப் படங்களையும் பார்வையிட்ட நடுவர் குழுவினர், பெண் இயக்குனர் Ralitza Petrova இன் முதல் முழுநீளத் திரைப்படமான Godless ஐ மிகச்சிறந்த படமாக தெரிவு செய்தனர். இத்தெரிவுக்கான காரணமாக அவர்கள் கூறியது, இத்திரைப்படம் மற்றைய படங்களை விட மிகச் சிறந்தது «Simply Best» என்பதே. பல்கேரியா மக்களின் குற்றவியல் விளிம்புநிலை வாழ்க்கையை வெளிக்கொண்டு வரும் Godless திரைப்படம், மிக இருட்சியானதும், அழுத்தமானதும் கதையமைப்பைக் கொண்டது. 
Ralitza Petrova இத்திரைப்படத்திற்காக மேடையில் விருதை பெற்றுக் கொண்ட போது, «நாங்கள் தனித்துவிடப்படவில்லை. நாங்கள் தனியானவர்களும் இல்லை, எம்மை அடையாளம் கொண்டு, அங்கீகாரம் கொடுத்தமைக்கு நன்றி» என்றார். 
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக, போதை வஸ்துக்கு அடியமையான ஒரு மருத்துவத் தாதியாக நடித்திருக்கும் Ireana Ivanova க்கு, மிகச்சிறந்த நடிகைக்கான தங்கச் சிறுத்தை விருது கிடைத்தது.  1937 ம் ஆண்டு வெளிவந்த Max Blecher இன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Scarred Hearts திரைப்படத்திற்காக ரோமானிய இயக்குனர் Radu Jude க்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது கிடைத்தது.
சிறந்த இயக்குனருக்கான விருது, The Ornithologist திரைப்படத்திற்காக போர்த்துக்கல் இயக்குனர் Joao Pedro Rodrigues க்கு கிடைத்து. மேடையில் அவர் விருதைப் பெற்றுக் கொண்ட போது, «இத்திரைப்படத்தை உருவாக்க காரணமாக இருந்த தொழில்நுட்பக் குழுவில் ஒரு சிலருக்கு இன்னமும் சம்பள நிலுவை உள்ளது», அவர்களுடன் இப்பரிசுத் தொகையை பகிர்ந்துகொள்கிறேன். போர்த்துக்கல் நாட்டின் சினிமாவை ஊக்குவிக்க, எமது அரசு இனியாவது கண்விழித்துக் கொள்ளட்டும் என்றார். 
சிறந்த நடிகருக்கான விருதை The Last Family திரைப்படத்திற்காக Andrzej Seweryn பெற்றுக் கொண்டார். Special Mention  விருது, Tizza Covi இயக்கிய, Mister Universo திரைப்படம் பெற்றுக் கொண்டது. 
«இன்றைய இயக்குனர்கள்» (Filmmakers of the Present" section) பிரிவில் லொகார்னோவின் உயரிய விருதை Eduro Williams இயக்கிய El Auge Del Humano திரைப்படம் வென்றது. மபுதோ, மொசாம்பிக் மற்றும் பூனோ ஏர்ஸ் என பல நாடுகளில் இளைஞர்களை பின் தொடர்ந்து ஆராய்கிறது இத்திரைப்படம். 
இப்பிரிவில் நடுவர் குழுவின் சிறப்பு விருது The Challenge எனும் திரைப்படத்திற்காக Yuri Ancarani க்கு கிடைத்தது. ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் Mariko Tetsuya சிறந்த வளர்ந்து வரும் இயக்குனர் விருதை வென்றார்.  Special Mention விருது Kiro Russo இயக்கிய Viejo Calavera எனும் திரைப்படத்துக்கு கிடைத்தது.
இம்முறை பியாற்சே கிராண்டே திறந்த வெளியரங்கில் திரையிடப்பட்ட படங்களிலிருது மக்களின் விருப்பத்திற்குரிய தெரிவு விருது (Prix du Public) இங்கிலாந்தின் புகழ்பெற்ற புரட்சி இயக்குனர் Ken Loach இன் I, Daniel Blake திரைப்படத்திற்கு கிடைத்தது. இங்கிலாந்தின் நலிந்த வாழ்வுநிலையில் இருக்கும் சாதாரண மக்கள், அரசின் சமூக நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்காக எவ்வளவு பிரேயத்தனம் செய்ய வேண்டியுள்ளது என பிரிட்டிஷ் அரச அலுவலகச் செயற்பாடுகளை கடுமையாகச் சாடும் இத் திரைப்படம் கடந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதை  வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இம்முறைத் திரைப்பட வெற்றிகரமாக முடிந்ததையிட்டு அதன் கலை இயக்குனர் Carlo Chatrian தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதுடன், புதிய இளம் இயக்குனர்களுக்கு இம்முறை அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. நடுவர் குழுவிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் அவர்களுக்கு நல்ல பாராட்டும் கிடைத்துள்ளது. எனவே இது எமக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவ்விழா நடந்து முடிந்த இப்பதினொரு நாட்களும், மனிதத்தை வெளிப்படுத்தும் படங்களை திரையிட முடிந்தது. மனிதத்தின் பல முகங்களை, விளிம்புநிலையிலிருந்தும், மத்தியிலிருந்தும் வெளிக்கொண்டு வர முடிந்தது. பல அழுத்தமான உணர்ச்சிகளை இத்திரைப்படங்கள் கொண்டுவந்திருந்தன. அதோடு உலகின் மிக முக்கிய சினிமா கலைஞர்கள் ஒன்று கூடிய இடமாகவும், தமது கலைப் படைப்புக்களோடு மிக அழுத்தமான செய்திகளை வெளியிட்ட இடமாகவும் லொகார்னோ அமைந்துள்ளது. அதற்கு பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பும் கிடைத்துள்ளது என்றார்.
விருதுகளை வென்ற திரைப்படங்கள், முழுப்பட்டியல் : 
Concorso internazionale
Pardo d’oro
“Godless” by Ralitza Petrova, Bulgaria/Denmark/France
Premio speciale della giuria (Special Jury Prize)
“Inimi Cicatrizate” (Scarred Hearts) by Radu Jude, Romania/Germany
Pardo per la miglior regia (Best direction)
João Pedro Rodrigues for “O Ornitólogo,” Portugal/France/Brazil
Pardo per la miglior interpretazione femminile (Best actress)
Irena Ivanova for “Godless” by Ralitza Petrova, Bulgaria/Denmark/France
Pardo per la miglior interpretazione maschile (Best actor)
Andrzej Seweryn for “Ostatnia Rodzina” (The Last Family) by Jan P. Matuszyński, Poland
Special Mention
“Mister Universo” by Tizza Covi, Rainer Frimmel, Austria/Italy
Concorso Cineasti del presente
Pardo d’oro Cineasti del presente – Premio Nescens
“El Auge Del Humano” by Eduardo Williams, Argentina/Brazil/Portugal
Premio speciale della giuria Ciné+ Cineasti del presente (Special Jury Prize)
“The Challenge” by Yuri Ancarani, Italy/France/Switzerland
Premio per il miglior regista emergente (Prize for the best emerging director)
Mariko Tetsuya for “Destruction Babies,” Japan
Special Mention
“Viejo Calavera” by Kiro Russo, Bolivia/Qatar
First Feature
Swatch First Feature Award (Prize for Best First Feature)
“El Futuro Perfecto” by Nele Wohlatz, Argentina
Swatch Art Peace Hotel Award
“Maud Alpi for Gorge Cœur Ventre,” France
Special Mention
“El Auge Del Humano” by Eduardo Williams, Argentina/Brazil/Portugal
Pardi di domani
Concorso internazionale
Pardino d’oro per il miglior cortometraggio internazionale – Premio SRG SSR
“L’immense Retour (Romance)” by Manon Coubia, Belgium/France
Pardino d’argento SRG SSR per il Concorso internazionale
“Cilaos” by Camilo Restrepo, France
Locarno Nomination for the European Film Awards – Premio Pianifica
“L’immense Retour (Romance)” by Manon Coubia, Belgium/France
Premio Film und Video Untertitelung
“Valparaiso” by Carlo Sironi, Italy
Special Mention
“Non Castus” by Andrea Castillo, Chile
Concorso nazionale
Pardino d’oro per il miglior cortometraggio svizzero – Premio Swiss Life
“Die Brücke Über Den Fluss” by Jadwiga Kowalska, Switzerland
Pardino d’argento Swiss Life per il Concorso nazionale
“Genesis” by Lucien Monot, Switzerland
Best Swiss Newcomer Award
“La Sève” by Manon Goupil, Switzerland
Prix du Public UBS
“I, Daniel Blake” by Ken Loach, United Kingdom/France/Belgium
Variety Piazza Grande Award
“Moka” by Frédéric Mermoud, France/Switzerland

ad

ad