புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம். பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது. ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார்.

புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது

புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம்.
பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது.

ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf  நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ad

ad