புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

சென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். முதல்வர் அறிவிப்பு

சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு
இயக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இதனை அறிவித்த முதல்வர், தமிழகத்தில் நாள்தோறும் 1.79 கோடி பயணிகள் 20,839 அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தும் நிலையை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு 2012-ஆம் ஆண்டு முதல் டீசல் மானியம் வழங்கி வருகிறது. 
கடந்த 4 ஆண்டுகளில் 1,556 கோடியே 72 லட்சம் ரூபாய் டீசல் மானியமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் 200 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களை அருகில் உள்ள போக்குவரத்து முனையங்களுடன் இந்த சிற்றுந்துகள் இணைக்கின்றன. சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு இயக்கப்படும். 
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 200 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1,600 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

ad

ad