புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2016

சங்குவேலி கொலை சூத்திரதாரிகளை 10நாட்களுக்குள் கைது செய்ய உத்தரவு

மானிப்பாய் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவருடன் வந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொலை சூத்திரதாரிகளை 10 நாட்களுக்குள் கைது செய்யுமாறு மல்லாகம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி மானிப்பாய் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (வயது 31) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது, இளவாலை வழிப் போக்குவரத்து பேருந்தின் உரிமையாளரான சிவகுமாரன் பிரணவனின் சகோதரனான கனகலிங்கம் மன்மதன் என்பவரை சன்னா மற்றும் அவரது நண்பர்கள் வெட்ட வந்தவேளை ஆள்மாறி பிரணவனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்த தகவலின் பிரகாரம், ஆலடி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராசா சயிந்திரன் (சயின்) (வயது 25) என்று அழைக்கப்பட்டவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கான திகதி மல்லாகம் நீதிமன்றினால் இடப்பட்ட நிலையில், கண்கண்ட சாட்சியான மன்மதனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை.

பிறிதொரு திகதியான நேற்று புதன்கிழமை (14.09) மல்லாகம் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கு திகதியிடப்பட்ட நிலையில் கண்கண்ட சாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தாண்டியும், சாட்சி மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகி கொலைக்கு உடந்தையாக வந்த நபரை அடையாளம் காட்டினார்.

அடையாள அணிவகுப்பின் பிரகாரம் குறித்த நபரை தொடர்விளக்கமறியலில் வைத்ததுடன், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த ஆமை றொசான் என்றழைக்கப்படுபவரையும், பிரணவனை கொலை செய்த ஏனைய மூவரையும் 10 நாட்களுக்குள் கைதுசெய்து எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள வழக்கின் போது மன்றில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன் மானிப்பாய் பொலிசாருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து வழக்கினை ஒத்திவைத்தா

ad

ad