புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் நடுத்தெருவில் : அமைச்சர் விஜயகலா


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்  புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளும், நடுத்தெருவில் கைவிடப்ப ட்டதாகவும், இனிவரும் காலத்தில் அவ்வாறு இடம்பெறாமல், அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுமெனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகத்தில், நேற்று 100 பேருக்கு சீமெந்து பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த கால அரசினால்  உரிய முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லையென குறிப்பிட்ட அவர், இனிவரும் காலத்தில், முன்னாள் போராளிகள், மாற்றுத் திறனாளிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை முன்னிலைப்படுத்தியே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே அதிக வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ad

ad