புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2016

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 17 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 20 வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ரஷ்யா மற்றும் அமெரிக்கா பயணத்தை ரத்து செய்தார். தாக்குதல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காஷ்மீர் முதல் அமைச்சர், ஆளுநர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்துறை, பாதுகாப்புத்துறை, உளவுத்துறை, எல்லைப்பாதுகாப்புத்துறை ஆகிய அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனிடையே ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

ad

ad