புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2016

26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற கொம்படி அம்பாள் ஆலயத்தின் மேற்படி வருடாந்த உற்சவம் கடநத 26 வருடங்களுக்குப்பின்னர் தற்போது நடைபெற்று வருகின்றது
.
இன்று காலை 7.00 மணிக்கு கண்டாவளை ஆவரஞ்சாட்டி  குஞ்சுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து108  பெண்கள் மஞ்சள் ஆடையணிந்து பாற்செம்புகள் சுமார் நான்கு கிலோமீற்றர்  பவனியாக எடுத்து வரப்பட்டு 1008 இளநீர்   1008 சங்குகள் மற்றும் கொண்டுவரப்பட்ட 108 பாற்செம்புகள் கொண்டு  கொம்படி அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயம் இந்தப்பிரதேசத்தின் பூர்வீக  ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன்  இவ்வாலயம்  கண்ணகி  மதுரையை எரித்ததாக கூறப்படுகின்ற புராண காலத்தில்  இலங்கையில் கடற்கரை  யோரம் அமைக்கப்பட்ட பத்து கண்ணகி ஆலயங்களில் இது எட்டாவதாக அமைக்கப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது
  கடந்த 1990ம் ஆண்டிற்குப்பினர் ஏற்பட்ட யுத்தத்தினால் ஆலயம்
சேதமடைந்துள்ளதுடன் மக்கள் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த ஆலயம் புனரமைக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னர் நடைபெற்று வருகின்ற இத்திருவிழா நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad