புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி

2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை அதிபர்களாக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 3901 பேர் அதிபர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
தரம் மூன்றுக்கான அதிபர் சேவைக்காக பத்து ஆண்டுகளின் பின்னர் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிப் பரீட்சைக்காக 21,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 19,000 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். போட்டிப் பரீட்சையின் ஊடாக 3,858 பேர்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மேலும் 43 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு எப்போது அதிபர் நியமனம் வழங்கப்படும் என்ற உறுதியான திகதிகளை அமைச்சர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad