புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2016

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து
வருகிறது, நேற்று, இரவு முதல் மீண்டும் கர்நாடக அரசு  தண்ணீரை நிறுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, கர்நாடகாவில் ஒரு தனியார் பேருந்தி டிப்போ, தீயிட்டு கொளுத்தப்பட்டது.42 பேருந்துகள் தீக்கிரையானது.அந்த சம்பவத்தில் கைதான 11 பேரில், 22 வயது பெண்ணான பாக்யாவும் ஒருவர், அங்கு இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து பாக்யா தான் இதைத் தூண்டியது என முடிவுக்கு வந்துள்ளதாம் காவல்துறை.

ஆனால், இப்படி பாக்யா செய்ததற்கு இன வெறி போன்ற விஷயங்கள் காரணம் இல்லை. பாக்யாவின் தாயார் எல்லெம்மா செய்தியாளர்களிடம், " 100 ரூபாயும் , மட்டன் பிரியாணியும் தருவதாக சொல்லி, பாக்யா போராட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.அன்று மதியம் பாக்யா வீட்டில் இருந்தபோது, அவரை போராட்டத்திற்கு அழைத்தனர். " KPN டிப்போ இருக்கும் கிரிநகருக்கு அருகில் தான் பாக்யாவின் வீடு இருக்கிறது.
சிசிடிவி பதிவுகளில் வேறு சில பெண்மணிகள் இருந்தாலும், அந்த பதிவுகள் தெளிவாக இல்லை என்கிறது காவல்துறை. அன்று மாநிலம் முழுவதும் நடந்த கலவரத்தில் சுமார் 400 பேர் கைதானார்கள். அதில், பாக்யா மட்டும் தான் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad