புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2016

5 கோடி தொழிலாளர்கள்; முடங்கும் 25 ஆயிரம் கோடி! -அரசைப் பணிய வைக்குமா பொது வேலை நிறுத்தம்?

தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நாளை நடக்க இருக்கிறது. ' இது
தொழிலாளர்களின் கோரிக்கைக்கான போராட்டம் மட்டும் அல்ல. தேசத்தின் நலனைக் காப்பதற்காக நடத்தப்படும் வேலைநிறுத்தம்' என்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
ஆளும்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தவிர்த்து, நாளை நடக்கவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் பங்கேற்க இருக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர், " நமது நாட்டில் நவீன தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்தி கால் நூற்றாண்டு கடந்துவிட்டன. இதை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தொழிலாளர்களின் வாழ்வோ எளிய மக்களின் வாழ்க்கைத்தரமோ மேம்பாடு அடையவில்லை. எனவே, விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கிறோம். நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடைபெறும்போது, முந்தைய வேலைநிறுத்தத்தைவிட கூடுதலான தொழிலாளர்களே பங்கேற்று வந்துள்ளனர். 2010-ம் ஆண்டு செப்டம்பர் 7 மற்றும் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 28 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடந்தபோதும்,
எங்களின் கோரிக்கைக்காக ஒரு விவாதத்தை நடத்தக்கூட மத்திய அரசு முன்வரவில்லை. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி மறந்துவிட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும்விதமாகவே மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதை எதிர்த்து கடந்தாண்டு செப்டம்பர் 2 அன்று பொது வேலைநிறுத்தம் நடந்தது. நாளை நடக்க இருக்கும் வேலைநிறுத்தமும் வெறும் நாளாக மட்டும் இருக்காது. மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக, வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யும்விதத்திலேயே அமையும்" என்றார் குமுறலோடு. 
சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " பொதுவாக வேலைநிறுத்தம் என்றாலே, ' அன்றாட வாழ்க்கை பாதிக்கும்' என்றரீதியில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இது மிகவும் தவறானது. அனைத்து தரப்பு மக்களும் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வேலையின்மையால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக, தொழிற்சங்க சட்டங்கள் திருத்தப்படும் வேலைகள் நடக்கின்றன. இத்தனை நிகழ்வுகளும், மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவால் ஏற்பட்டவை. மக்களின் நலனுக்காகத்தான் தேசம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. எங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. இது ஏதோ தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகவோ, போனஸ் பேச்சுவார்த்தைக்காகவோ நடைபெறுகிற போராட்டம் அல்ல. பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கிய போராட்டம் இது. நம்முடைய ஒற்றுமையே, அரசின் காதுகளை அதிர வைக்கும்" என்றார் கொந்தளிப்போடு. 
கடந்த ஆண்டு மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் ஒருநாளில் மட்டும்25 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அசோசெம் தகவல் வெளியிட்டது. குறிப்பாக, ' அடிப்படை சேவைகள், பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அனைவரும் ஏற்கத்தக்க தீர்வை அளிக்க வேண்டும்' எனவும் அசோசெம் தெரிவித்தது. ' நாளை நடக்கவிருக்கும் வேலை நிறுத்தத்தால் இழப்பின் அளவு கூடும்' என்கின்றனர் தொழிற்சங்கங்கள்

ad

ad